இனி குறைவாக ரீசார்ஜ் செய்யலாம். அதிகமாக பேசலாம்.மொபைல் கட்டணம் அதிரடியாக குறைகிறது!!

0
232
செல்போன் கால் கட்டணம், டேட்டா கட்டணம் விரைவில் அதிரடியாக குறைக்கப்பட உள்ளது. செல்போன் நிறுவனங்களுக்கு இடையே இணைப்புக்கட்டணத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) குறைக்க உள்ளதால் இந்த கட்டணம் குறைய உள்ளது.
தற்போது, நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புக்கட்டணம்(ஐ.யு.சி.) ஒரு அழைப்புக்கு 14 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதை நிமிடத்துக்கு 10 காசுகளாக குறைக்க டிராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்புக்கட்டணம் என்பது விவாதப்பொருளாக மாறிவிட்டது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் ஐ.யு.சி. கட்டணத்தை அதிகப்படுத்தி 30 காசுகளாக உயர்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச அழைப்புகளை அறிமுகப்படுத்தியது பெரிய பாதிப்பு ஏற்படுத்திவிட்டது.
இது குறித்து சமீபத்தில் டிராய்  தலைவர் ஆர். எஸ். சர்மாவுக்கு ஏர்டெல் பாரதி நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கடிதம் எழுதி இருநதார். அதில் கூறியிருப்பதாவது-  தற்போது இருக்கும் ஐ.யு.சி. கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஏற்கனவே கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆதலால், கட்டணத்தை நியாயமான முறையில் உயர்த்தி, வௌிப்படைத்தன்மையைகொண்டு வர வேண்டும் எனத் தெரிவி்க்கப்பட்டு இருந்து.
இந்நிலையில், ஐ.யு.சி. கட்டணத்தை குறைக்க டிராய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நிமிடத்துக்கு 14 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அது 10 காசுகளாக குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த கட்டணம் முறை நடைமுறைக்கு வந்தால், இன்டர்நெட் கட்டணம், அழைப்புக்கட்டணம் வெகுவாகக் குறையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here