அணு ஆயுதத்தை குவிக்கிறது இந்தியா… கவலையில் அமெரிக்கா


வாஷிங்டன்:இரு அமெரிக்க அணு விஞ்ஞானிகள் இந்தியா சீனாவுக்காக தனது அணு ஆயுத உற்பத்தியை நவீன மயமாக்கி அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த அணு விஞ்ஞானிகள் ஹேன்ஸ் எம் கிறிச்டென்சன் மற்றும் ராபர்ட் எஸ் நோரிஸ், இவர்கள் அமெரிக்காவில் வெளியாகும் மாதப் பத்திரிகை ஒன்றில் “இந்திய அணு ஆயுதங்கள் 2017” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
அதில்உள்ளதாவது,இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தி என்பது முதலில் பாகிஸ்தானை பயமுறுத்த ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அது சீனாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியா தனது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் உள்ளது. தற்போது இந்தியாவிடம் 7 அணுஆயுத ஏவும் நிலையங்கள் உள்ளன. அதில் இரண்டு விமானம் மூலமாகவும், நான்கு தரையில் இருந்து குறி பார்த்து ஏவும் நிலையம் மூலமாகவும் ஒன்று கடலில் இருந்து செயல்பட்டு ஏவும் நிலையமாகவும் உள்ளது.
இது தவிர இன்னும் நான்கு முறைகள் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவைகளும் செயல்படுத்தும் அளவுக்கு வந்து விடும். ஏற்கனவே அக்னி 4 மூலம் வட இந்தியாவில் இருந்து சீனாவின் பீஜிங் நகரை தாக்க முடியும், இப்போது உருவாக்கி வரும் அக்னி 4 மூலம் சீனாவை தாண்டியும் தாக்க முடியும் இது போல பல சோதனைகளை இந்தியா செய்து வருகிறது. இவைகள் செயலுக்கு வரும்போது சீனாவின் வடக்கு எல்லையை இந்தியாவின் தெற்கு பகுதியான சென்னைக்கு அருகிலிருந்தே தாக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறி விடும். தற்போது இந்தியாவிடம் சுமார் 120லிருந்து 130 அணுகுண்டுகள் உள்ளன. விரைவில் மேலும் அணுகுண்டுகள் இந்தியா தயாரிக்கும். அக்னி 5 இந்தியாவின் தெற்கு எல்லையில் நிறுவப்படும். மேலும் இது  இராணுவத்தில் பலம் பொருந்திய சீனாவிற்கு சவாலாக இருக்கும்  என  அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment