பட்டபகலில் பஸ்சை நடுரோட்டில் வழிமறித்து கல்லூரி மாணவனுக்கு வெட்டு

By

தண்டையார்பேட்டை : கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் பிரவீன் (18). சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், நேற்று காலை கும்மிடிப்பூண்டியில் இருந்து மாநகர பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டார். பாரிமுனை பிரகாசம் சாலையில் வந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழி மடக்கியது. பின்னர், பிரவீனை கீழே இழுத்து வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார், ரத்த வெள்ளத்தில் துடித்த பிரவீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சையம்மன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே உள்ள முன்விரோதம் காரணமாக, பழிக்குப்பழி வாங்குவதற்கு மாணவனை வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய கல்லூரி மாணவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.