தொடரை கைப்பற்றிய இந்திய அணி !கடைசி இருபது ஓவர் போட்டியில் நியூ சீலாந்து தோல்வி …

                           Image result for yesterday match images about india batting 2017-11-7
நேற்று  திருவனந்தபுரத்தில் நடைபெற்ற   இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

                           Image result for yesterday match images about india batting 2017-11-7
 இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 17, பாண்டியா 14, கோலி 13 ரன்கள் எடுத்தனர். 
                        Image result for yesterday match images about india batting 2017-11-7
நியூசிலாந்து அணியில் சவுத்தி, சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று அசத்தியது. நியூசிலாந்து அணியில் கிராண்ட்ஹோம் 17 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ரா 2, புவனேஷ்வர்குமார், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.