மணிரத்தினத்திற்கு ஆச்சர்யம் அளித்த விஜய் சேதுபதி

நடிகர்  விஜய் சேதுபதி குறைந்த காலகட்டத்தில் நிறைய படங்களை நடித்தது மட்டுமல்லாது மக்கள் மனதில் பெரும் இடத்தையும் பிடித்தவர். இவர் தற்போது  மணிரத்னம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி. இந்நிலையில், மணிரத்னம் விஜய் சேதுபதிக்கு ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அது என்னவென்றால், இந்த புதிய படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்று கூறி அவர்களுடைய பெயரையும் மணிரத்னம் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத விஜய்சேதுபதி “என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்” என்று கூறினாராம். இந்த பதில் மணிரத்னத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment