டிடிவிக்கு அல்வா எடப்பாடிக்கு பூமாலை!!!

அதிமுக, ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது.
 ஓ.பி.எஸ். அணியில் 11 எம்எல்ஏக்களும், சில எம்பிக்களும் உள்ளனர்.டிடிவி தினகரன் அணியில் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்ற எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி அதிமுகவைச் சேர்ந்த அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன், அசனா ஆகியோர் இதுநாள் வரை சசிகலா அணியில் இருந்து வந்தனர். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது, புதுவை அருகே, எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி, பாஸ்கரன் ஆகியோர், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து, 
அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதுச்சேரி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பும் அளித்தனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment