டீ உடலுக்கு நல்லதா? கேட்டதா??

இன்னுமும்  சிலர்  டீ வாசனை மூக்கைத் துளைத்தால் மட்டுமே  படுக்கையில் இருந்தே எழுவார்கள்.
டீ குடித்தால் சில புற்றுநோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். 
அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது. ஒரு கப் டீயில் காபியை விட குறைவான ‘காபீன்’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் டீயுடன் நிறுத்திக் கொள்வது நல்லது. 
இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடக் கூடும். சிலர் டீயை கொதிக்க கொதிக்க அப்படியே தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, மருத்துவ ஆய்வு ஒன்று. 

Leave a Comment