இலங்கையில் தளபதியாகும் தமிழர்!!

இலங்கை கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேன பிறப்பித்துள்ளார். விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்கு பின்னர், 21வது கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 1982 ல் கடற்படையில் சேர்ந்த சின்னையா, இங்கிலாந்து கடற்படை கல்லூரியில் பயிற்சி பெற்றுள்ளார். கிழக்கு கடல் பிராந்தியத்தில் கமாண்டராக பணிபுரிந்துள்ளார். அவர் போரின் போது சிறப்பாக பணிபுரிந்ததற்காக பல விருது பெற்றுள்ளார்.

Leave a Comment