பிரதமரை சந்திக்க காத்திருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!

புதுடில்லி : துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார். அங்கு இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்.,சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை (ஆக.,14) காலை 11 மணிக்கு ஓபிஎஸ்., பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அணிகள் இணைப்பு, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.தற்போது மும்பையில் உள்ள அவர் மாலை டில்லி செல்ல உள்ளார்.

Leave a Comment