தமிழ் தலைவாஸ்-புனே அணி இன்று பலப்பரீட்சை

புரோ கபடி தொடரின் சென்னை சுற்று போட்டிகள் வெள்ளியன்று (செப். 29) தொடங்குகின்றன.புரோ கபடி தொடரின் ஐந்தாவதுசீசன் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 12 அணி கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றன.கடந்த ஜூலை மாதம் தொடங்கிய போட்டிகளில் இதுவரை 9 நகரங்களில் நடைப்பெற்று முடிந்துள்ளன. 10 வது நகரமாக சென்னையில் செப். 29-ல் தொடங்கி அக். 5 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகிறன.

சென்னையில் நடைபெறும் 11 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி 6 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் தொடக்க விழா வெள்ளியன்று ( செப்.29 ) ஆம் இரவு 7 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,சென்னை அணியின் உரிமையாளர் களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கலந்த கொள்கின்றனர். பின்னர், தொடங்கும் துவக்க போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிபுனேரி பால்டன் அணியை எதிர் கொள்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயிண்டஸ் அணிபாட்னா பைரட்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை இவென்ட்சோ இணையதளம், விகே பேக்கரி கிளைகள், முத்தூர் பின்கார்ப் கிளைகள், நேரு உள்விளையாட்டு அரங்கின் 10-வது நுழைவு வாயிலில் உள்ள கவுண்ட்டர் ஆகியவைகளில் பெறலாம். போட்டிக்கான டிக்கெட் கட்ட ணம் ரூ.200, ரூ.450, ரூ.750, ரூ.2,500,ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்தகுந்த அங்கீகார கடிதத்துடன் வந்தால் 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி, 2 சமனுடன் 32 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இனி வரும் 9 லீக் ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் தமிழ் தலைவாஸ் சென்னையில் களம் இறங்குகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment