குறுஞ்செய்தியில் காலக்கெடு !ஆதார் இணைப்பு விவகாரம்…

                                  Image result for aadhar card
ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை கூறி வருகிறது. வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் கட்டாய நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அதுபோலவே, தனிநபர் ரகசியத்தை காப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவு தனிநபர் உரிமைக்கு எதிரானது கூறியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதார் எண் இணைக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஏ.கே சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் கூறுகையில், ”ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்கியதன் மூலம் வங்கிகளும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் மக்களிடம் பீதியை கிளப்புகின்றன. உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறி கணக்கில்லாத அளவு மொபைல் போன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். இதனால் மக்கள் கடுமையான பீதிக்கு ஆளாகின்றனர்” எனக் கூறினார்.
தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2018 பிப்ரவரி 6-ம் தேதியும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2017 டிசம்பர் 31-ம் தேதியும் கடைசி தேதி என்பதை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அரசியல் சாசன அமர்வு இந்த ஆதார் விவகாரம் குறித்து இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் இறுதித் தீர்ப்பை அளித்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *