கேரளா இடது முன்னணி முதல்வருக்கு கேரள பெரியார் விருது வழங்கிய தமிழ் புலிகள் கட்சி…!

கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன் அவர்கள் தொடர்ந்து முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக்கி நடைமுறை படுத்தியது.மற்றொன்று ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதியற்றவர்கள் என சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்தது. இதுபோன்ற முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கேரளாவின் இடது முன்னணி முதல்வர் பினராய்விஜயன்  அவர்களுக்கு கேரள பெரியார் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. உடன் மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.