மாபெரும் எழுத்தாளர் பிறந்த நாள் இன்று !புலவர் வல்லிக் கண்ணன்…

Image result for இன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி), பிறந்த நாள்- நவம்பர் 10, 1920.

இன்று தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி), பிறந்த நாள் அவர் பிறந்தது   நவம்பர் 10, 1920 அன்று .. எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் பல இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது. புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர் வல்லிக்கண்ணன். சுமார் 75 ஆண்டு காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published.