துபாயில் பதுங்கியுள்ளாரா…? தாய்லாந்து முன்னாள் பிரதமர்…

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. இவர் தனது ஆட்சியின் பொழுது அரிசி மானிய கொள்கையை அறிமுகப்படுத்தி திட்டத்தின் தலைவராகவும் இருந்த நிலையில் திட்டம் தோல்வி அடைந்தது. விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாததுடன் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ கிளர்ச்சியை அடுத்து ஷினவத்ரா அரசு கவிழ்க்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதம் நாட்டை விட்டு தப்பியோடிய யிங்லக் ஷினவத்ரா குற்றம் செய்துள்ளார் என நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனை விதித்தது.

முதற்கட்ட புலனாய்வு விசாரணையின்படி ஷினவத்ரா துபாயில் இருக்கிறார் என தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா கூறியுள்ளார்.

ஆனால் தாய்லாந்து நாட்டின் முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அலட்சிம் செய்தால் அதிக அளவாக 10 வருட சிறை தண்டனை வழங்கப்படும்.5 வருடம் சிறை தண்டனையை ஏன் வழங்கினர் என்பது பற்றிய விளக்கத்தினை நீதிபதிகள் தெரிவிக்கவில்லை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment