தூத்துக்குடியில் வெடிக்கும் கைபேசி அழைப்பால் பரபரப்பு !

சமிபக்கலாமாக whatsapp மற்றும் முகநூலின் ஆதிக்கம் எங்கும் பரவி இருக்கிறது இதனால் நன்மைகள் பல வந்தாலும் தீமைகளுக்கு பஞ்சமில்லை சென்னை வெள்ளம் முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை ஆதிக்கம் நடத்தியது இந்த சமூக வலைதளங்களே

கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி பற்றிய ஒரு ஆடியோ பரவி வருகிறது அது என்னவென்றால் 16 இலக்கம் கொண்ட ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது இந்த அழைப்பை  எடுத்தவுடன்  கைபேசி  வெடித்துவிடுகிறது இதனால் தூத்துக்குடியில் 27 பேர் இறந்துவிட்டனர்  என்று ஒரு சிறுவன் பேசுகிறான் இது யாரோ ஒருவரால்  அந்த சிறுவன் பேச சொல்லி பேசுகிறான் என்று நன்றாக தெரிகிறது ,இதனை தொடர்ந்து மற்றுமொரு ஆடியோ என்  நண்பர்கள் அனுப்பினார்கள் இதை மற்றவர்களுக்கு பகிரவும் என்ற குரலில் பேசுகிறார் .இதனால் தூத்துக்குடி மக்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். ஒருவர் அனுப்பும் தகவல் உண்மை தன்மை உள்ளத என்று அறியமால் நம்மில் பலபேர் பகிர்கிறோம் தினச்சுவடு சார்பாக தொளில்நுட்டப வல்லுனர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கூறியதை கிழே குரிபிட்டுள்ளோம்.
ஆடியோ இணைப்பு 
தொலை பேசி வெடிக்க கரணங்கள் 

பேட்டரி 
ஒரு கைபேசிக்கான தகுந்த பேட்டரி பயன்படுத்தவில்லை என்றால் அது வெடிக்கும் அபாயம் உள்ளது 
சார்ஜர் 
போலியான சார்ஜர் பய்னபடிதினாலும் மற்றும் கைபேசியில்  பேசும் சார்ஜர் போட்டுக்கொண்டும் பேசினால் வெடிக்கும் அபாயம் உள்ளது .
அதிகப்படியான அழுத்தம் மற்றும் தொழிநுட்ப பிரச்சனைகளால் ஒரு தொலைபேசி வெடிக்கும் ஆனால் குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் அழைப்பால் கைபேசி வெடிக்காது ..
இது போன்று உண்மை இல்லாத தகவல்களை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 
 

Leave a Comment