தன் பெயரை உபயோகப்படுத்தி நாஞ்சில் சம்பத் மீது வழக்கு போட யாருக்கும் அனுமதி தரவில்லை-துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

தன் பெயரை உபயோகப்படுத்தி நாஞ்சில் சம்பத் மீது வழக்கு போட யாருக்கும் அனுமதி தரவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்ததும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் ஆத்திரடமைடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். தற்போது தீவிர விசுவாசிகளான நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் டிடிவிக்கு இரு கரங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பேட்டியின் போது எல்லை மீறும் வார்த்தைகளில் உள்ள வரம்பின் உச்சிக்கே சென்று விடுகின்றனர்.
இதற்கான பிரதிபலனை தான் நாஞ்சில் சம்பத் அனுபவித்து வருகிறார். அதாவது பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கடுமையாக விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத் மீது 8 வழக்குகள் பதியபட்டுள்ளன.
இதனிடையே தமிழக அரசை பின்னால் இருந்து இயக்கி வருவது ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் குருமூர்த்தி தான் என நாஞ்சில் சம்பத் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் காவல்நிலையத்தில் குருமூர்த்தி உறவினர் கார்த்தி என்பவர் நாஞ்சில் சம்பத் மீது புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தன் பெயரை உபயோகப்படுத்தி நாஞ்சில் சம்பத் மீது வழக்கு போட யாருக்கும் அனுமதி தரவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவு கரம் நீட்ட குருமூர்த்தி தயாராக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Leave a Comment