தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் -க்கு கொலை மிரட்டல்

மெர்சல் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை-க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தோல் திருமாவளவன்-க்கும் இடையே கருத்து மோதல் நடிபெற்று வருகிறது அதன் விவரம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் நடிகர் விஜயை வளைத்துப் போடுவதற்காக பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக திருமாவளவன் தமிழக பாஜக மீது  குற்றம் சாட்டினார்.

இதற்கு  தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பதில் “விஜயை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. திருமாவளவன் தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலகத்தை வளைத்து போட்டுள்ளார். என்று அவர் பதிலுக்கு திருமாவளவன் மீது  குற்றம் சாட்டினார்.

இதற்கு  திருமாவளவன்  அளித்த பதில் என்னவெனில் ” பண்பாடு மிக்க ஒரு தலைவரின் வாரிசு இப்படி பேசி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் தமிழிசை அளித்த பேட்டியில் “நேற்று மாலை 4 மணி வரையில் என்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதுபோன்று போனிலும், சமூக வலைத்தளங்களிலும் என்னை விமர்சித்து வருவது தவறான அணுகுமுறையாகும். மிரட்டல்களை கண்டு நான் அஞ்சமாட்டேன். மெர்சல் குறித்து எனது கருத்தையே பதிவு செய்தேன். தவறாக பதிவிடவில்லை. இப்போதும் எனது முடிவில் உறுதியாகவே உள்ளேன்”-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.