தொகுதி பங்கீடு – தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரம் காட்டி வருகிறது அதிமுக. ஏற்கனவே, தேமுதிகவுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி சுலபமான முடிவு எட்டவில்லை. எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்காததால் தேமுதிக அதிருப்தியில் உள்ளது.

பாமகவிற்கு நிகரான தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்றும் ஒரு எம்பி சீட்டு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதிமுக தரப்பில் அதிகபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் நேற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த இருந்த நிலையில், தேமுதிக அதனை தவிர்த்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எஸ்.கே சுதீஷிடம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்