அசாம் சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றியை தக்கவைத்து பாஜக வரலாற்று சாதனை!

அசாம் சட்ட சபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்று ஆளும் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அசாம் சட்டசபை தேர்தல் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அதேபோல பாஜக கூட்டணியிலும் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய சில கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 76 தொகுதிகளை கைப்பற்றியதுடன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48  தொகுதிகளை கைப்பற்றியது. 76 தொகுதிகளை கைப்பற்றி அசாமில் ஆளும் கட்சியான பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து அசாம் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் அசாமில் காங்கிரஸ் தான் அடுத்தடுத்த இரு முறைகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸை தவிர்த்து முதல்முறையாக பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.

Rebekal

Recent Posts

இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…

2 mins ago

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

8 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

9 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

13 mins ago

நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…

16 mins ago

நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க மின்னல் வேகத்தில் இருக்கும்!!

Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…

55 mins ago