கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர்தான் நாதுராம் கோட்ஸே என குறிப்பிட்டு இருந்தார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையிலில் பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் பிராக்யா சிங் பேசுகையில், ; நாதுராம் கோட்ஸே ஒரு தேச பக்தர் என குறிப்பிட்டார்.

இதற்கு கண்டனங்களை தெரிவித்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ‘பிரக்யா சிங்கின் பேச்சானது, பாஜகவின் முகத்தை காட்டுகிறது; கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேசியது கண்டனத்திற்கு உள்ளானது. நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் பிரக்யா சிங்கின் பேச்சு அமைந்துள்ளது. என தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

DINASUVADU