ரஜினிகாந்த் ஆதரவு நிச்சயமாக பாஜகவுக்கு கிடைக்கும் – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

நடிகர் ரஜினிகாந்த் தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதில், கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.

இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குஉள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நாகர்கோவிலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர்.ஆன்மீகத்தை எடுத்துச் செல்பவர்.ரஜினிகாந்த் ஆதரவு  நிச்சயமாக பாஜகவுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

3 mins ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

9 mins ago

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

59 mins ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

1 hour ago

மாணவர்களுக்கு இன்று முதல் ஜாலி தான்…தொடங்குகியது கோடை விடுமுறை.!

Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…

2 hours ago

மீண்டும் மோதிக்கொள்ளும் குஜராத்- டெல்லி !! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago