தமிழக அரசின் பயிர் கடன் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்…!

கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். கொரோனா மற்றும் புயல் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள நிலையில், தமிழக அரசு பயிர் கடன் ரத்து அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதால் விரைவில் இவர்களுக்கு மின்சார வசதி கிடைக்கும் என்றும்,  கொரோனா மற்றும் புயலால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து உள்ள சூழலில், தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.