SG Suriya BJP

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்!

By

அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவு சென்னை தி-நகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்து சென்றனர்.

2 நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சூர்யாவை மதுரை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொய் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட எஸ்ஜி சூர்யாவை, மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தனிப்படை காவல்துறை.