ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என கூறிவிட்டோம் என அண்ணாமலை தகவல்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என தெரிவித்தார். இடைத்தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என இரு தலைவர்களிடமும் கூறிவிட்டோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இடைத்தேர்தலில் தனித்தனியாக நிற்காமல் சேர்ந்து நிற்க வேண்டும். வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளருடன் நாம் அணிவகுத்து நிற்க வேண்டும்.

எந்த கட்சியின் உட்கட்சி பிரச்சனையிலும் தலையிடமாட்டோம், பிரித்து குளிர்காய பாஜக விரும்பவில்லை.  ஓ.பி.எஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் பரிந்துரை. சுயேட்சை வேட்பாளருக்கு பாஜக ஒருபோதும் ஆதரவு அளித்ததில்லை. பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க கேட்டபோது சில நிபந்தனைகளை பன்னீர்செல்வம் வாய்த்த எனவும் அண்ணாமலை கூறினார்.

வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் இன்னும் கூடுதல் அவகாசம் கேட்டார் என்றும் இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம். இதனால் இபிஎஸ் வேட்பாளரை, ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment