பாஜக தேசிய குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் இல. கணேசன்.!

பாஜக தேசிய குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை இல.கணேசன் ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார். இதனிடையே, மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்திருந்தார்.

சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பாஜக தேசிய குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை இல.கணேசன் ராஜினாமா செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்