ஜெய்ப்பூரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

ஜெய்ப்பூரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்,  இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று  மாலை 4 மணிக்கு நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும், பாஜக எம்எல்ஏக்கள் இன்று முதல் வரும்-14 வரை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வருகின்ற 14-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!