பிளாஸ்மா தானம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா

பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

By venu | Published: Jul 06, 2020 03:49 PM

பாஜக செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

சம்பித் பத்ரா பாஜகவின் செய்தித் தொடர்பாளராவார் .இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இதன் பின்னர் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அவர் குணமடைந்த நிலையில்  வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள பிளாஸ்மா தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அதனை கொண்டு மற்ற கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சையாகும்.

இந்நிலையில் அவர் தற்போது முழுவதும் குணமடைந்த நிலையில்  தான் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலே பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரதமரின் கொள்கைப்படி, நான் இன்று பிளாஸ்மா தானம் செய்துள்ளேன்  என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc