பாஜக ஒரு சர்வாதிகார சக்தி ;நாங்கள் அதை தகர்த்து எறிவோம் – கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் காண கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டனர்.

பாஜக சர்வாதிகார சக்தி:

இதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி இது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது.அவைகளை நாங்கள் தகர்த்து எறிவோம் நாங்கள் எந்தவிதமான விதி மீறல்களில் ஈடுபடவில்லை என்றார்.

ராகுல்காந்தியால் தென்மாவட்டங்களில் எழுச்சி :

நீங்கள் அந்த மாணவர்களிடம் பேட்டி எடுத்து பாருங்கள் எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.ராகுல்காந்தி வருகையினால் தென்மாவட்டங்கள் எழுச்சி அடைந்து உள்ளன.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.

இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவது தான் ஒரு தலைமையின் பண்பு.அந்த பண்பை  ராகுல்காந்தி செய்திருக்கிறார்,எனவே பாஜகவின் செயல்பாடு அங்கு ஏதும் எடுபடாது என்று கூறினார்.

மூன்றாவது அணி:

காங்கிரஸ் மூன்றாவது அணியில் சேர விருப்பப்படுவதாக ஒரு உறுதியற்ற செய்தி பரவியது.இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி நாங்கள் யாருடனும் பேசவில்லை வதந்திகளை பரப்ப வேண்டாம் எங்களுக்கு மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை கிடையாது என்று கூறினார்.

Dinasuvadu desk

Recent Posts

நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க மின்னல் வேகத்தில் இருக்கும்!!

Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…

9 mins ago

அடுத்த அடி இன்னும் உக்கரமாக இருக்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…

14 mins ago

அதீத ஹெட்போன் பயன்பாடு..! 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு !!

WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…

17 mins ago

மீனாட்சி திருக்கல்யாணம் 2024.! தீர்க்க சுமங்கலி வரம் தரும் மீனாட்சியம்மன்.!

மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…

32 mins ago

தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்…

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…

1 hour ago

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

1 hour ago