பாஜக புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேறியுள்ளது – வைகோ.!

பாஜக புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேறியுள்ளது – வைகோ.!

புதுச்சேரியில் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றன.

அருணாச்சலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்ற எதிர்க்கட்சி அரசுகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கவிழ்த்தனர்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல், நாராயணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டுவிட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். வரும் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube