,
Tamilnadu CM MK Stalin

பாஜக அரசு Unpopular ஆகிவருகிறது… INDIA கூட்டணி popular ஆகிவருகிறது..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

By

மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த சுமார் 60 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், கூட்டணியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 9 ஆண்டுகளில் செய்ததை பட்டியலிட முடியாமால், இந்தியா கூட்டணி கட்சிகளைப் பற்றி வசைபாடி வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

I.N.D.I.A கூட்டணி தற்போது நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது; இதுவரை காணமுடியாத சர்வாதிகார ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; அரசியல் எதிரிகளை பழிவாங்க ED, CBI போன்றவற்றை பாஜக பயன்படுத்துகிறது. மிகப்பெரிய போர்க்களத்தில் ஈடுபடப் போகிறோம்; அனைவரும் பக்க பலமாக நின்று இணைந்து துணை நிற்க வேண்டும்.

நாளுக்குநாள் மத்திய பாஜக அரசு Unpopular ஆகிவருகிறது. INDIA கூட்டணி popular ஆகிவருகிறது. பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கூட்டணியின் விளம்பரதாரராக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா கூட்டணி உடையும் என்ற பிரதமரின் கனவு தகர்ந்துவிட்டது. 28 காட்சிகள் ஒன்று சேர்ந்து வலிமை மிக்க கூட்டணி என நிரூபித்துள்ளோம்.