பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

7

நாகை, பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டுள்ளார். கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழையூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  போலிசார்  அந்த சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.