கந்து வட்டிக்காரரின் வயிற்றில் 3 முறை சுட்டுக் கொன்ற பாஜக கவுன்சிலர் கைது !

gun shot

கர்நாடகாவில் பாஜக கவுன்சிலர் ஒருவர் தான் வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுத்து கடன் கொடுத்தவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சங்கேஷ்வர் நகராட்சியின்  14 வது வார்டு கவுன்சிலர்  உமேஷ் காம்ப்ளே,இவர் ஷைலா நிரஞ்சன் சுபேதாரி என்ற பெண்ணிடம்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.25 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார்.

இதனை நீண்ட காலமாக செலுத்தாமல் காம்ப்ளே மறுத்து வந்துள்ளார்.இதனையடுத்து ஷைலா தான் இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த காம்ப்ளே தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஷைலா வின்  வயிற்றில் மூன்று முறை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.