உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகின்றன. அவ்வப்போது தங்களது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 59 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஹாடிமா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

இதனிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும். காங்கிரஸ் கட்சிக்கும் தான் போட்டி நிலவுகிறது. இந்த சமயத்தில்,  உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் திடீர் திருப்பமாக மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கர்னல் அஜய் ராவத் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube