,

பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்…பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேட்டி.!

By

Kushbhu BJP

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேட்டி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணத்தின் போது,  பேசிய அமித்ஷா தமிழகத்திலிருந்து வரும்காலங்களில் பிரதமர் வர வேண்டும் என பேசியிருந்தார். வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றும் அமித்ஷா உரையாற்றினார்.

இதனை குறிப்பிடும் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில் தமிழகத்திலிருந்து பிரதமர் எதிர்காலத்தில் யார்வேண்டுமானாலும் வரலாம், ஆனால் 2024 தேர்தலை குறிப்பிட்டு அமித்ஷா சொல்லவில்லை. தகுதியுடைய நபர்கள் எதிர்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என்று கூறிய குஷ்பு, நம் பாரத பிரதமர் மோடி இரண்டு முறை பிரதமராக தொடர்கிறார்.

மக்களுக்கு அவர் செய்த நல்ல திட்டங்கள் மற்றும் நாடு முன்னேற்றம் அடைய அவர் கொண்டுவந்த திட்டங்கள் மூலம் அவர் மீண்டும் பிரதமராக தொடர்ந்தார். மேலும் அதிமுக உடனான கூட்டணி பற்றி கேட்டபோது, தமிழக்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் இதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார். வரும் ஜூலை 9 இல் தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு தெரியவரும் என்றும் கூறினார்.