பா.ஜ.க. கூட்டணிக்கு ஆளுநா் அழைப்பு ???

பா.ஜ.க கூட்டணியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சி அமைக்க நாகாலாந்தின்  ஆளுநா், அழைப்பு விடுத்துள்ளாா்.

நாகாலாந்து, மேகாலாய , திரிபுரா உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தோ்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 60 தொகுதிகள் கொண்ட நாகாலாந்து சட்டசடைப தோ்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நாகா மக்கள் முன்னணி 27 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் தனிப் பெரும்பான்மை இல்லை. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க. 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. . தொடா்ந்து ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சை வேட்பாளா் ஒருவா் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தொிவித்துள்ளனா்.

ஆதரவு கிடைக்கப் பெற்றதைத் தொடா்ந்து தங்களுக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவா் நெபியூ ரியோ ஆளுநா் பிபி ஆச்சாா்யாவை சந்தித்து உாிமை கோாினாா்.

இதன் அடிப்படையில், ஆட்சி அமைக்க , தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு ஆளுநா் பிபி ஆச்சாா்யா ஆட்சி அமைப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளாா். இதனால் நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment