விரைவில் திருமணம் செய்யவிருக்கும் நித்தீன்.!

பீஷ்மா பட நடிகரான நித்தீன் தனது காதலியை வரும் ஜூலை 26ம் தேதி திருமணம்

By ragi | Published: Jul 03, 2020 10:30 AM

பீஷ்மா பட நடிகரான நித்தீன் தனது காதலியை வரும் ஜூலை 26ம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்தீன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகதருமான சுதாகர் ரெட்டியின் மகன். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ஹிட்டான ஜெயம் என்ற படத்தின் ரீமேக் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஷ்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.தற்போதுசாய்பல்லவி உடன் RangDe என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் இவரது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் வைத்து ஷாலினி என்ற பெண்ணுடன் மிகவும் கிராண்டாக நடைப்பெற்றது. மேலும், இவர்களது திருமணத்தை துபாயில் வைத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதில் பங்கேற்க பிரபல  நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அழைப்பு  விடுத்திருந்தது.ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா தொற்று காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இவரது திருமணத்தை தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் ஜூலை 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடும்பத்தினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc