பிஸ்கட், டீ-க்காக .. ஆபரேஷன் செய்யாமல் பாதியில் சென்ற மருத்துவர்..!

By

டீ குடிக்க ஆசைப்படும் போது யார் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களுக்குப் பிடித்த டீ கடைக்கு பைக்கில் சென்று டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. அந்த அளவிற்கு டீ மக்களுக்கு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு டீக்காக ஆபரேஷன் செய்யாமல் பாதியில் மருத்துவர் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

   
   

நவம்பர் 3-ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவின் துணைத் தலைநகரான நாக்பூர் மாவட்டத்தின் மௌடா தாலுகாவில் உள்ள காட் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எட்டு பெண்கள் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுகாதார மையத்தில் இருந்த மருத்துவர் பாலாவி ஆரம்பத்தில் நான்கு பெண்களுக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்து சிகிச்சை அளித்தார்.

மற்ற பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டநிலையில் அப்போது மருத்துவர் டீ, பிஸ்கட் கேட்டார். இருப்பினும், அவருக்கு தேநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிக்சை செய்யுயாமல் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியேறினார். ஏற்கனவே கிராமப்புறங்களில் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் மருத்துவரின் இந்தசெயல் கிராம மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பல புகார்கள் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்ப சுகாதார நிலைய தலைமை செயல் அதிகாரி 3 பேர் கொண்ட குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், நாங்கள் நீரிழிவு நோயாளிகள், எங்களுக்கு சரியான நேரத்தில் டீ பிஸ்கட் தேவை. இது இல்லாமல்,  இரத்த சர்க்கரை அளவு குறைகிறது,  இரத்த அழுத்தமும் குறைகிறது என்று  கூறினார்.

Dinasuvadu Media @2023