அசாம் : தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்….!

அசாம் மாநிலத்தில்,பறவைகள் தற்கொலை செய்யும் ஒரு வினோதமான சம்பவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அசாமில் உள்ள ஜடிங்கா என்னும் மலைக் கிராமத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் பறவைகள் படையெடுத்து செல்கின்றன.ஆனால்,இனப்பெருக்கத்திற்காக பறவைகள் அங்கு செல்லவில்லை.மாறாக,தற்கொலை செய்து கொள்ளவே அங்கு செல்கின்றன.இதை நம்ப முடியாவிட்டாலும் அதான் உண்மை.

ஜடிங்கா கிராமத்தில், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள மரங்களில் மோதியும்,மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்தும் தற்கொலை செய்து கொள்கின்றன.இதனால்,இந்த குறிப்பிட்ட நாட்களில் ஜடிங்கா கிராமத்தினுள் வெளியாட்கள் நுழைய அசாம் அரசு தடை விதித்துள்ளது.

மேலும், பறவைகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அசாம் அரசு கண்காணிப்பு கோபுரங்களை ஜடிங்கா கிராமத்தில் அமைத்தது.இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,ஜடிங்கா கிராமத்தில் நிலவும் கடுங்குளிர்,நிலா வெளிச்சம் இல்லாத இரவு நேரம் மற்றும் மழை பெய்யும் தருணம் ஆகிய மூன்றும் ஒரே சமயத்தில் வரும்போது பறவைகளின் இறப்புகள் அதிகமாக நடக்கின்றது.மேலும்,அங்கு உள்ள காந்த பண்புகளின் மாற்றம் பறவைகளின் மூளையை பாதித்து அவைகளை தற்கொலைக்கு தூண்டுகிறது போன்ற பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.எனினும், பறவைகளின் இறப்பிற்குரிய உண்மையான காரணங்கள் புரியாத புதிராகவே உள்ளது.