கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் ! 200 கோழிகள் பலி

கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. 

சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை 31-பேருக்கு இது வரை கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரனோ வைரஸ் பீதி ஒரு புறம் இருக்க தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.கோழிக்கோடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் சுமா 200 கோழிகள் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.இந்த சோதனையில்தான் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதியானது.எனவே பறவைக்காய்ச்சல் தொடர்பாக கேரளாவில் அவரசக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  மேலும் மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்  கடந்த 2016-ஆம் ஆண்டு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமான வாத்துகள் இறந்தது.இதுமட்டும் அல்லாமல் வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய நிபா வைரஸ் தாக்கத்தாலும் கேரள மாநிலத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.