பறவை காய்ச்சல் எதிரொலி..லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு – கால்நடைத்துறை அமைச்சர் தீவிர நடவடிக்கை

கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார்.  இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. சுற்றுப்பரப்பிலுள்ள வாத்து, கோழிகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து வேங்கேரி, கொடியத்தூரில் உள்ள 2 கோழி பண்ணைகளில் உள்ள கோழி, வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவை பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்து, பரவாமல் தடுக்க அந்த இரண்டு பண்ணைகளில் இருந்தும் சுமாா் 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்