வெப் தொடராக உருவாகும் மணி ரத்னம் பட நடிகையின் வாழ்க்கை வரலாறு.!

மணிரத்னம் பட நடிகையான அனு அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெப் சீரிஸ் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

மணி ரத்னம் அவர்களின் ‘திருடா திருடா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய அனு அகர்வால், அந்த படத்தில் இடம் பெற்ற ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இளசுகளின் மனதை சூறையாடினர். அதனையடுத்து பல இந்தி படங்களிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் 1999ல் நடந்த விபத்தில் படுகாயமடைந்த இவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மன தைரியத்தை கைவிடாத அனு இயற்கை வைத்தியம், யோகா என பல செய்து முற்றிலும் குணமடைய ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தற்போது அவரது வாழ்க்கையின் போராட்டத்தை வெப் தொடராக எடுக்க போவதாக கூறப்படுகிறது. அனு அகர்வால் கதாபாத்திரத்தை அவரே நடிக்கவுள்ளதாகவும், இந்த வெப் சீரிஸை பிரபல முன்னணி நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அனு அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.