நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில், கடும் நடவடிக்கை; கூட்டுறவு சங்கம்.!

நியாய விலைக்கடைகளில் வாங்காத பொருளுக்கு பில் கொடுத்தால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஸ்மார்ட் கார்டு எனும் குடும்ப அட்டை மூலம், தேவையான பொருட்களை, கைரேகை மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்கிறார்கள், மற்றும் உரியவர்களது மொபைலில் குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட பொருட்களின் பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் வாங்காமலே சில பொருட்களின் பில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறதாக புகார்கள், எழுந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கம் அறிக்கையை அறிவித்திருக்கிறது. குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருளுக்கு குறுஞ்செய்தி மூலம் பில் பெறப்பட்டதாக புகார் வந்தால், உரிய விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar