பில்கிஸ் பானு வழக்கு: விசாரணை மே-9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேருக்கு எதிரான மனு விசாரணை மே 9 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 11பேருக்கு கடந்த 2008இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் 11 பேரும் கடந்த சுதந்திரத்தினத்தின்  போது நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தொடர்ந்து இருந்தார். தண்டனைக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாகவும் மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று மே 2ஆம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில், 11 பேர் விடுதலை செய்யப்பட்ட அடிப்படை காரணங்களை கேட்ட உச்சநீதிமன்றம் அதற்கான உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று அவருக்கு நடந்தது நாளை வேறு ஒருவருக்கு நடக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்ததுடன், விடுதலைக்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் நீதிமன்றமே முடிவுக்கு வர நேரிடும் என எச்சரித்தனர், இதனையடுத்து மே 2ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய மற்றும் குஜராத் அரசு ஆவணங்களை சமர்ப்பிக்க ஒப்புக்கொண்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை மே 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

author avatar
Muthu Kumar