“நான் ரஜினியின் தீவிர ரசிகர்!” தமிழில் உரையாடிய சஞ்சு சாம்சன்!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூ-டியூப் பக்கத்தில் சஞ்சு சாம்சன், தாம் ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் தனக்கு தமிழ் நன்றாக தெரியும் என உரையாடியுள்ளார்.

திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்ட இந்திய கிரிக்கெடீ அணியில் வீரர் சஞ்சு சாம்சன், முதல் முதலாக உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்கு சார்பாக விளையாடினார். இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஆடிவந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி சூழல் பந்துவீச்சாளர் அஸ்வின், தனது யூ-டியூப் பக்கத்தில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட சிலரிடம் உரையாடல் நடத்துவார். அந்தவகையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சஞ்சு சாம்சனிடம் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் அஸ்வின், நீ கேரளா தான? எனக்கு மலையாளம் தெரியும். ஆனா இவ்வளவு அழகா எப்படி தமிழ் பேசுற என அஸ்வின் கேட்க, அதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், நான் ரஜினியின் தீவிர ரசிகர் என்று கூற, நான் நன்றாக தமிழ் பேசுவேன் என்றும் கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.