2-வது காலாண்டில் ஜப்பானுக்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இரண்டாவது காலாண்டில் ஜப்பான்  மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததால் , ஜப்பானின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.8% ஆக குறைந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் வணிக மற்றும் நுகர்வோர் செலவினங்கள் குறைந்ததால் ஜப்பான் இரண்டாவது காலாண்டில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மே மாதத்தின் பாதியில் ஜப்பானில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆனாலும், நடப்பு காலாண்டில் பொருளாதாரம் மந்தமான நிலையாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உலகளவில், சீனாவைத் தவிர  மற்ற நாடுகளில் பொருளாதார மந்தநிலையாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 3.2% வளர்ச்சியை கண்டுள்ளது. அதுவே ஜனவரி-மார்ச் மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் 6.8% சரிவைக் கண்டது.

கடந்த 1980 -ம் ஆண்டு 27.2% மிகப்பெரிய சரிவைக் கண்டது அதன் பின்னர், தற்போது தான்மிக பெரிய வீழ்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜப்பான் 17.8% வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan