31 C
Chennai
Friday, October 22, 2021

BiggBoss 5 : எங்க அம்மா என்னைய போலீஸ்காரங்கட்ட அடி வாங்க வச்சாங்க…!

பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நதியா.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அனைவரும் தங்களது வாழ்க்கையை குறித்த அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நதியா அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது, அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எனக்கு என்னைக்கு அம்மா மேல ரொம்ப ஒரு வெறுப்பு வந்துச்சின்னா, போலீஸ்காரங்ககிட்ட என்னைய அடி வாங்க வச்சாங்க.

நான் என்னோட லைப் முழுவதுமே வேலை, வேலை என்று தான் அலைஞ்சிருக்கேன். என்னோட டீனேஜ் வயதை நான் என்ஜாய் பண்ணவே இல்லை. எனக்கு என்னோட வாழ்க்கையில மனுஷர்கள் கொடுக்காத ஒரு அங்கீகாரத்தை ஒரு ஆப் (APP ) கொடுத்துச்சி என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

spot_imgspot_img

Hot Topics

Read More