BIGG BOSS 5 Day 4 : திருநங்கை நமிதாவின் வாழ்க்கை இவ்வளவு கொடூரமானதாக இருந்ததா….!

இன்று பிக் பாஸ் வீட்டில் ஐந்தாவது நாள் என்ன எல்லாம் நடந்தது, நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு என்ன என்பதை அறியலாம் வாருங்கள்.

வழக்கம் போல காலை பாட்டு போட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் நடனம் ஆடுகின்றனர். பின் அபிஷேக் பவானியிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பது குறித்து ஜாலியாக பேசுகிறார். அதன் பின் ப்ரியங்காவிடம் இமான் அண்ணன் லக்சரி பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து கேட்க, நமக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி நாம் பொருட்கள் வாங்குவது தான் இந்த லக்சோரி பட்ஜெட் என கூறுகிறார்.

பின் ஸ்ருதி சாப்பிட்டுவிட்டு அனைவரும் சிங்கில் அப்படியே போட்டு விடாதீர்கள் இது குப்பைத்தொட்டி அல்ல என அனைவரையும் ஒழுக்கமாக இருக்கும்படி கூறுகிறார். அதன் பின் திருநங்கை நமிதா மாரிமுத்து தனது வாழ்க்கை நிகழ்வு குறித்து கூறியுள்ளார்.

நமிதாவின் வாழ்க்கை …..

திருநங்கை நமிதா மாரிமுத்து தனது கடந்து வந்த பாதை நிகழ்வு குறித்து கூறுகிறார். அவரது வாழ்க்கை மிகவும் கண்ணீரின் பாதையாக தான் இருந்துள்ளது. முதலில் அவர் தனது சிறுவயதிலேயே தனக்கு ஆண் உணர்வு மாற்றம் அடைவதை உணர்ந்து, அவ்வப்போது பெண்கள் போல உடை அணிய ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர்  இவ்வாறு உடை அணிய கூடாது என கூறியுள்ளனர்.

மேலும், அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதால் பாசமாக வளர்த்துள்ளனர். எனவே தங்கள் மகன் மாறிவிடக் கூடாது என அவரது பெற்றோர்கள் நினைத்ததாக கூறியுள்ளார். அதன் பின்பும் தனது வீட்டை விட்டு வெளியேறி சில திருநங்கை தோழிகளுடன் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் உனக்கு இன்னும் வயது வரவில்லை, 18 வயதுக்குப் பின்பதாக நீ உனது விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என தோழிகளும் கூறியுள்ளனர்.

ஆனால் தற்போது வயது போதாது என கூறியுள்ளனர். எனவே, நமிதா தன்னை தேற்றிக்கொண்டு தனது குடும்பத்தினருடன் போயிருந்துள்ளார். ஆனாலும் தன்னால் ஒரு ஆணாக வாழ முடியவில்லை என்பதால் அவ்வப்போது பெண் போல தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் அவர் குடும்பத்தினர் அவரை புறக்கணித்துள்ளனர். இருப்பினும் நமிதாவால் தனது மாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாததால் குடும்பத்தினரே மிகவும் மோசமாக அவரை தாக்கியுள்ளனர்.

பின் நமிதாவை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதித்து மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கை போல வாழ வைத்துள்ளனர். ஆனால், நமிதா இரண்டு மாதத்தில் தனது அறையில் உள்ள கம்பிகளை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி அதன் மூலமாக பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். அப்பொழுதும் அவரது குடும்பத்தினர் நமிதாவை பார்த்து விடவே, நமிதா உயிருக்கு பயந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

18 வயது ஆகிவிட்டதால் நீதிமன்றத்திலும் நமிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். 18 வயது ஆகிவிட்டதால் அவரே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அவர் தன்னை புறக்கணித்த பெற்றோர்களும் உறவினர்களும் இருந்த அதே பகுதியில் பெண் போல உடையணிந்து திருநங்கை தோழிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது அவரது நிலையை புரிந்து கொண்ட அவரது தந்தை நமிதாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

அதன் பின் தனது தாயார் அவ்வப்போது பேசினாலும் வீட்டுக்கு வரும்போது பெண்கள் போல வராதே, கம்மல் போடாதே என கூறுவாராம். எனவே, தனது தாயாரின் வீட்டுக்கு போவதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். ஒருமுறை அவரது தந்தை உடல்நல குறைவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது தந்தையை பார்க்க சென்ற நமிதா, நான் அறுவை சிகிச்சை செய்து விட்டேன் பாருங்கள் என தாயிடம் காண்பித்துள்ளார். அதன் பின் அவரது தயார் கொஞ்சம் கொஞ்சமாக நமிதாவை ஏற்று கொள்ள ஆரம்பித்துள்ளார்.

அதன் பின்பு சென்னை அழகி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் வாங்கியுள்ளார். இதனை அவரது தாயார் அனைவரிடமும் காண்பித்து சந்தோஷப்பட்ட இந்த அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்க வேண்டும் என பெங்களூர் சென்று தமிழ்நாடு பாரம்பரியப்படி புடவை அணிந்து, போட்டியில் கலந்து கொண்டு அங்கும் நமிதா வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றதன் பின்பு அவருக்கு இந்திய திருநங்கை அழகி போட்டிக்கான தலைமைப் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர் பல இன்னல்களை சந்தித்து ஸ்பெயின் சென்றுள்ளார். இவ்வாறு தொடர்ச்சியாக சென்று, அவர் ட்ரான்ஸ்ஜெண்டர் மிஸ் தமிழ்நாடு, சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், இந்தியா, வேர்ல்டு உட்பட பல அழகி பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் பெண்ணாக இவர்  நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கூறிய நமிதா, நாங்கள் மாறி விட்டோம். ஆனால் நீங்கள் மாறுங்கள். நாங்கள் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதில் ஈடுபடுவதற்கு காரணமும் பெற்றோர்கள் தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளின் இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு படிப்பை மட்டும் கொடுங்கள்.

நாங்கள் நிச்சயம் நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். நமிதாவின் வாழ்க்கை அங்கு இருந்த அனைவருமே கலங்க வைத்துள்ளது. இறுதியாக தனக்கு உதவிய உறவுகளுக்கு நன்றி சொல்லி, சாதித்து விட்டேன் என கலங்கியபடியே பாடல் ஒன்றை பாடியுள்ளார். நமிதாவுக்கு அனைவரும் ஆறுதல் கூறி பாராட்டியுள்ளனர்.

ராஜுவும் ஜக்கி பெர்ரியும் அனைவர் முன்பும் ஜாலியாக பேசி சிரிக்கிறார்கள். காதலன் காதலி போல ராஜு பேச ஜக்கி பெர்ரி நக்கல் செய்கிறார். இமான் அண்ணாச்சி தான் கேமரா மேனாம்.

மதுமிதாவின் வாழ்க்கை …

மதுமிதா ஜெர்மனியில் பிறந்து வளர்த்துள்ளார், அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளாராம். பேஷன் டிசைனிங் படித்துள்ளார். சகோதரியின் பணி காரணமாக மதுமிதாவுக்கு ஆஸ்திரேலியா சென்று மீண்டும் திரும்பியுள்ளார். அங்கு தனது தனிப்பட்ட உறவு ஒருவரால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், தற்கொலை முயற்சி செய்து கொள்ள துணிந்து பெற்றோரின் முகத்தை நினைத்து அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இறுதியாக திருநங்கை நமிதா இமான் அண்ணனிடம் பேசிவிட்டு, நான் திருநங்கை என்பதற்காக யாரும் ஓட்டு போட கூடாது, என்னை பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் என கூறியுள்ளார். அதன் பின் பவானி மதுமிதாவிடம் அபினை பற்றி பேசுகிறார். அதன் பின் அபினையிடம் மன்னிப்பு கோருகிறார் அனைவரும் அங்காங்கு அமர்ந்து பேசியவாறு இந்த நாள் நிகழ்வு முடிவடைகிறது.

author avatar
Rebekal