வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் பிரபலம்.!

நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி

By ragi | Published: May 31, 2020 05:24 PM

நடிகை பிந்து மாதவியின் அப்பார்ட்மென்டில் உள்ளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிந்து மாதவி, ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் ஒரு விளம்பர படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டு பிரபலமானர். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான கழுகு 2 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிந்து மாதவி தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த அப்பார்ட்மென்டில் உள்ள அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பார்ட்மென்ட் கேட்டை அதிகாரிகள் இழுத்து மூடியதாகவும், 14 நாட்கள் யாரும் வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார் .

 

 

Step2: Place in ads Display sections

unicc