பிக்பாஸ் சீசன் - 4 தொகுப்பாளர் இவர் தான் போலயே.! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!

பிக்பாஸ் சீசன் - 4 தொகுப்பாளர் இவர் தான் போலயே.! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4ஐ நாகார்ஜுனா தொகுத்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது ரசிகர்கள் அனைவரும் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். தமிழில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4ன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் ஷூட்டிங்கிற்கு தயாராகுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்புகள் ஆரம்பித்து விட்டீர்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். தெலுங்கில் விரைவில் பிக்பாஸ் தொடங்கப்படும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்