தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் பிக்பாஸ் பிரபலமான PearleMaaney நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் வலிமை படத்தில் மலையாள பிரபலமான PearleMaaney நடித்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார். பிரபல மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். சமீபத்தில் கூட இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் DJD நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.